Followers

உலகை ஆண்ட ஆதி தமிழர்களின் வரலாறு..!



உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு!

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர். 
குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்
 பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நம்பினால் நம்புங்கள் 
நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.

இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்
உலகத்தில் தமிழனை தவிர உலகத்தில் உள்ள அத்தனை நாட்டுக்கும்/மக்களுக்கும்  தெரியும்தமிழ்னோட பெருமை.
இவ்வளவு இருந்தும் நாசமாய் போன நம் தமிழினத்துக்கு ஒற்றுமை எண்ட ஒண்டு இல்லாமல் போயிட்டு 

  
தமிழர்களின் மொத்த மக்கள் தொகை, நாடு வாரியாக


Read more...

அன்னையர் தினம் தமிழன் கொண்டாடுவது பொருத்தமா...???




"தாய் என்ற ஒரு தெய்வம் வீட்டோடு இருக்கு நீ தனித்தனியாய் கோவில் குளம் அலைவதுவும் எதற்கு அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து ஆனந்த கண்ணீரில் அபிசேக்கம் நடத்து "
மறக்க முடியாத வாலியின் வரிகள் 

Read more...

யாழ் இந்து அன்னையின் மைந்தர்கள் மீண்டும் இணைந்த Jaffna Hindu Alumni Fiesta 2012

ஒரு சில நண்பர்களின்  வேண்டுதல் இந்த நிகழ்வு தொடர்பான பதிவை நீக்கி விட்டு புகைப்படங்கள் இணைக்கப்படுள்ளன

Read more...

இது உண்மையில காதலா காமமா....???காதலர்தின ஸ்பெஷல்

இந்த இழவு விழுந்த காதலர் தினம் ( வேலண்டைன்ஸ் டே ) இண்டைக்கு  எண்டு எனக்கு யாரோ ஒருத்தன் வாழ்த்தி அனுப்பி இருக்கிறான் இதை பார்த்த உடன இந்த பதிவை எழுதணும் எண்டு ஆசை பட்டன் கொஞ்சம் படிச்சு பாருங்க புடிச்சா உங்க கருத்தை சொல்லுங்க 

Read more...

சித்தர்களின் சித்து விளையாட்டுகள் --அதிரடி உண்மைபதிவு --

சித்தர்கள் உண்மையானவர்களா..??-மர்ம தகவல்கள்-   

சொந்தங்கள் உறவுகள் எப்பிடி சுகம் ?
 நீண்ட காலத்தின் பின் மீண்டும் உங்களை சந்திக்கின்ன்
"பிந்திய புதுவருட வாழ்த்தும் முந்திய தைப்பொங்கல் வாழ்த்தும்"
ரைமிங் நமக்கும் வொர்க் அவுட்(work out) ஆகுது போல he he... :-p

Read more...

எம்.ஜி.ஆர் ஒரு சகாப்பதம் --வாழ்வும் வரலாறும் ஒரு பதிவு --


      
சொந்தங்கள் எப்படி இருக்குறீங்க....??
இண்டைக்கு எம்.ஜி.ஆர். நினைவுதினம் ஞாபகம் இருக்குதா....??   
எம்.ஜி.ஆர். என்ற மூன்று எழுத்தால் பாரெங்கும் புகழ்பெற்ற புரட்சித் தலைவர் மக்கள் திலகம் பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) என்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.

Read more...

மட்டகளப்பு,யாழ்ப்பாண பிரதேசவாதம்

--ஒற்றுமை இல்லா தமிழினம் ஈழ தமிழனின் கண்ணீர் கதை --
இலங்கை தமிழ் மக்கள் வாழும் பிரதேசமாக உள்ள வடக்கு ,கிழக்கு, மலையகம் மட்டும் கொழும்பு பிரதேசம் விளங்கினாலும்  பிரதேசவாதம் காரணமாக  மக்களிடம் ஒற்றுமை குறைந்து காணப்படுகின்றது
யார் பெரியவன்...?    

Read more...

இலவசமாக டொமைன் பெறலாம் வாங்க

தமிழில் முதலாவது Free டொமைன் பதிவு
சொந்தங்கள் எப்பிடி இருக்கிறீங்க..??
எனக்கு பல்கலைகழகத்தில் exam ஆகவே நீண்ட காலத்துக்கு பிறகு உங்களை சந்திக்கிறன் 
இன்று நங்கள் பார்க்க போக்கும் விடயம் டொமைன் .tkபெறுவது எப்படி

Read more...

ஈழ தமிழன் என்ன வியாபார பண்டமா.....??

ஆறாம்அறிவு இல்லாதவனுக்கு ஏழாம் அறிவு  தேவையா......??
Note:-
தயவு செய்து இந்த பதிவை தப்பான அரசியல் கோணத்தில் பார்க்க வேண்டாம்
அண்மையில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படம் உண்மையில் ஒருநல்ல கதை அம்சம் கொண்ட தமிழ் படம் என்பதை மறுக்கவோமறைக்கவோ முடியாது 
ஏன் எனில் இறுதில் சூரியா கதைக்கும் வசனங்கள் உணர்வை தூண்டுவனவாக இருப்பினும் அந்த உணர்வு வெகு சீக்கிரத்தில் மனதைவிட்டு போகமுடியதது என்பது அனைவற்கும் தெரிந்த உண்மை

Read more...

"சஞ்ஜீவ ஒலி" ஈழவானொலி என்று உலகுக்கு கூறு

ss
என்ன கொடுமை நம்மட ஆக்கள் ஒரு நல்ல விடயத்தை பண்ணினால் சத்தம் போடாமல் இருப்பாங்க ஆனால் இந்தியா காரன் பண்ணிபோட்டல் மட்டும் தூக்கிபிடிப்பாங்கள்
http://sanjeevaoli.com
முயற்சி உடையார் இகழ்ச்சியடையார்..
முயன்று முயன்று முன்னேறு...
முயன்று பார் முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைப்பாய்
இது நமது முன்னோர்களின் மொழி. எங்கள் வாழ்வில் என்றுமே கூட வரும் முது மொழிகள். இலட்சியப் பயணத்தில்தான் மனிதனுக்கு எத்தனை இடையூறுகள். அத்தனையையும் தாண்டி வெற்றியை அடைவதென்பது ஒன்றும் சாதாராண விடயம் இல்லைத்தான். உயர்ந்த அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிதான் வெற்றியின் அடிப்படை. அந்த வகையில் 
முதன் முதலாக முல்லைத்தீவிலிருந்து (முல்லைத்தீவு சுமந்த வலிகளை அறியாதவர்கள்  தமிழர்  இல்லை உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் வன்னி fm சஞ்ஜீவ ஒலிஇணைய வானொலி யானது
பாராட்டபடவேண்டியது போற்றபடவேண்டியது

Read more...

About This Blog

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP